வேல்முருகன், சுங்குவார் சத்திரம், காஞ்சிபுரம் உக்ரைன் விவகாரத்தில் பெரும்பாலான அமெரிக்க ஆதரவு பார்வையில் பத்திரிகைகள் ரஷ்யாவை சாடுகின்றன. நீங்கள் அமெரிக்கா பக்கமா? ரஷ்யா பக்கமா? உக்ரைனுக்கு நீண்ட கால நோக்கில் எது நல்லது, பாதுகாப்பானது என பார்க்க வேண்டும். இந்த கண்ணோட்டத்தில் உக்ரைன் இப் பிரச்சினையை கையாண்டிருந்தால் ரஷ்யா அத்துமீறி இருக்காது. அமெரிக்க,ஐக்கிய நாடுகள் வலையை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு ரஷ்யாவிடம் பேரம் பேசி உக்ரைன் நலன்களை பேணி இருக்க வேண்டும். இது அண்ணன் தம்பி சண்டை! விரைவில் இருவரும் கைகோர்க்கவும் வாய்ப்புண்டு! ...
மக்கள் நீதி மய்யத்தில் தர முன் வந்த 18 தொகுதிகளை புறக்கணித்துவிட்டு, அம்மகவில் ஆறு சீட்டுகளுக்கு ஒத்துக் கொண்டது ஏன்..? என்பதற்கு எஸ்டிபிஐ கட்சி வட்டாரத்தில் கூறியதாவது; அவர்கள் 18 தொகுதிகள் தர முன் வந்தது உண்மை தான்! ஆனால், நாங்கள் தான் தவிர்த்துவிட்டோம்! காரணம், அங்கே நாங்கள் சென்ற போது ஒரு கட்சி அமைப்புக்கான அட்மாஸ்பியரே அங்கு இல்லை! ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தினரின் அணுகுமுறையே அவர்களிடம் பக்காவாக வெளிப்பட்டது. தேர்தல் கூட்டணி பகிர்வு என்பதை கட்சிகளோடு தான் வைத்துக் கொள்ள முடியும்! ஒரு ...
திமுகவின் கூட்டணி கணக்குகள் குறித்த செய்திகள் மக்களிடம் மட்டுமல்ல, அந்த கட்சிக்குள் இருக்கும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளையும் குழம்ப வைத்துக் கொண்டுள்ளன! தேர்தல் கூட்டணிக்கு கொள்கை ரீதியிலான இணக்கமோ, புரிதலோ அவசியமில்லை சதவிகித கணக்குகள் போதும் என்ற குறுகிய கால ஆதாய அரசியல் கூட்டணிக்குள் பொருந்தாமல் சேரும் கட்சிகளின் அடையாளத்தை காலப்போக்கில் காணாமலடித்துவிடும் என்பதற்கு நிறைய உதாரணங்களை சொல்லமுடியும்! திமுகவுக்கு தன் சுயபலம் குறித்த சந்தேகங்கள் மேலெழத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது! கொள்கை சார்ந்த பிடிமானங்கள் தளர்ந்து, சந்தர்ப்பவாத அரசியலால் ஈர்க்கப்படும் யாருக்குமே இந்த சந்தேகம் ...
தமிழக அரசியல் சூழல் மட்டுமல்ல, இந்திய அரசியல் சூழலே தற்போது மூன்று பிரிவுகளாக இயங்குகிறது. # பாஜக ஆதரவு நிலைபாடுள்ள கட்சிகள்! # பாஜகவால் இயக்கப்படும் சிறுகட்சிகள்! # பாஜகவை எதிர்க்கும் கட்சிகள்! இந்த வகையில் தன்னை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகளை பாஜகவே வழி நடத்துகிறது! தன்னை வெளிப்படையாக ஆதரிக்க முடியாத வேறுபட்ட கொள்கை அடையாளம் கொண்ட கட்சிகளை எப்படியாவது வளைத்துப் போட்டு அவர்களின் லகானை தன் கையில் வைத்து இயக்குகிறது. மூன்றாவதாக தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றுக்கும் பதறியும்,கதறியும் எதிர்க்க வேண்டிய கட்டாயத்தை தன்னை ...
கவிதை மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம், அரசியல் கோட்பாட்டுக் கட்டுரைகள் என்று தொடர்ந்து பண்பாட்டுத் தளத்தில் செயல்பட்டு வருபவர் யமுனா ராஜேந்திரன். உத்தமவில்லன், ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், அரசியல் சினிமா: 16 இயக்குநர்கள் போன்ற 45க்கும் மேலான நூல்களை இவர் எழுதியிருக்கிறார். தமிழகத்தின் கோயமுத்தூரைச் சார்ந்த இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இடதுசாரி நிலையில் இருந்து நிகழ்வுகளைக் கறாராக மதிப்பீடு செய்யும் இவரை நேர்காணல் செய்தோம். சர்வதேசப் பண்பாட்டு நிலமைகள், ஜெயமோகன், மணிரத்தினம், கமலஹாசன் ஆகியோரது கருத்தியல், கம்யூனிசத்தின் இன்றைய ...
தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள் அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள் ஊழலை ஒழித்து நல்லாட்சி தருவார்கள் என்றெல்லாம் நம்பப்படுகிற பிரபல நடிகர்களான கமல்,ரஜினி,விஜய்யின் அப்பா உறுப்பினர்களாக உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் வரலாறு காணாத அளவில் பணம் கரை புரண்டோடிய தேர்தலாக உள்ளது! இத்தனைக்கும் வெறும் 1,303 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள ஒரு சங்கம் தான் இது! இதில் தலைவருக்கு போட்டியிட்ட இரு அணிகள் அள்ளிவிட்ட பணம் அசாதரணமானது. முரளி ராமநாதன் அணி ஒரு பிரிவாகவும் டி.ராஜேந்தர் அணி ஒரு பிரிவாகவும் இதில் ...
கமலஹாசன் எதற்காக அரசியல் கட்சி நடத்துகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது! ஒரு அரசியல் இயக்கத்தைப் பற்றிய அடிப்படை புரிதலாவது அவருக்கு இருக்கிறதா தெரியவில்லை! தனிமையே இனிமை என நினைப்பவர் தலைவனாக முடியுமா? கட்சி அமைப்புகளை கூட இன்னும் சரியாக கட்டி எழுப்ப ஆர்வம் காட்டாமல், மூன்று சதவிகித வாக்குவங்கியைக் வைத்துக் கொண்டு முதலமைச்சராக ஆசைப்படுகிறார்.எதற்கும் ஆசைப்படுவது தவறல்ல, சிகரத்தில் ஏற ஆசைப்பட்டால் அதற்கான சிரத்தையாவது இருக்க வேண்டுமல்லவா? அரசியலில் துரும்மைக் கூட சாதிக்காமல், விரும்பிய பதவியை அடையத் துடிக்கும் மனநிலை அவருக்கு எங்கிருந்து ...