ஹமீது, சென்னை கேள்வி கேட்பது எளிதா? அல்லது பதில் சொல்வது எளிதா? கேட்கப்படும் கேள்வியையும், சொல்லப்படும் பதிலையும் பொறுத்தது. ******************************************* சுரேஷ்குமார், கும்பகோணம், தஞ்சாவூர் பாஜகவுக்கு மாற்றான காங்கிரஸ் தடுமாற்றத்தில் இருக்கும் சூழலில் இடதுசாரிகளாவது தங்கள் பொறுப்பை உணர்ந்தார்களா? அந்த நம்பிக்கை உங்களுக்காவது இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! கண்ணதாசன் எழுதிய ‘நான் பார்த்த அரசியல்’ போல போல ஒரு புத்தகம் இன்று யாரால் எழுத முடியும்? கண்ணதாசனே ஒரு திறந்த புத்தகம்! அவரால் மட்டுமே எழுத முடியும் அது போல ஒரு புத்தகம்! ******************************************* ச.பாண்டியன், ...