இந்த நாடகத்தையெல்லாம் நாம் பார்க்க வேண்டி இருக்கிறதே! கோடினு கோடி உழைக்கும் மக்களின் இதயத்தில்  வழிகாட்டியாய் நிறைந்திருக்கும் காரல் மார்க்ஸை வழிபாட்டுக்குரிய சிலையாக்கி தங்கள் ரத்தக் கறை படிந்த கைகளை புனிதப்படுத்திக் கொள்ளத் துடிக்கிறது ஆளும் வர்க்கம்; மாமேதை காரல் மார்க்ஸ் அவர்கள்  ஊன் உறக்கமின்றி,  வறுமையையும், வாட்டும் பசியையும் பொருட்படுத்தாமல்  – ஒரு கர்மயோகியாய் வாழ்ந்து – வார்த்தெடுத்த சித்தாந்தமே கம்யூனிசம். அப்படிப்பட்ட மாமனிதரின் சிலையை – அவரது சித்தாந்தத்திற்கு நேர் எதிரான – எளிய மக்களின் உழைப்பை சுரண்டி கொழுக்கும் – ...