கருணாநிதி இயல்பானவர், எளிதில் அணுக முடிந்தவர், ஜனநாயகத் தன்மை கொண்டவர்! 1985 தொடங்கி அவரை பின் தொடரும் வாய்ப்பு எனக்கு அமைந்தது! எம்.ஜி.ஆர் ஆட்சியில் கலைஞர் தலைமையில் எதிர்கட்சிகள் கலந்து கொண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடந்தது மெரீனா சீரணி அரங்கில்! அதில் நல்லக் கண்ணுவும் கலந்து கொண்டு பேசினார். அப்போது கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய  அணியின் தலைவராக நல்லக்கண்ணு இருந்தார்! கலைஞர் பொதுக் கூட்டத்தில் நல்லக்கண்ணு பேசிய புகைப்படம் முதன்முதலாக நான் எடுத்து ஜனசக்தியின் முதல் பக்கத்தில் பிரசுரமானது! அதற்குப் பிறகு ...