இன்னும் எத்தனைக் காலம் தான் மெல்லக் கொள்ளும் விஷமான டாஸ்மாக் மது உற்பத்தியாளர்களை போஷித்து, வளர்த்து வருவார்கள்? ஆரோக்கியமான கள் உலக அளவில் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஏன் அதற்குத் தடை? லட்சக்கணக்கான விவசாயிகளை வஞ்சித்து, விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில பெருமுதலாளிகள் கொள்ளை லாபம் பார்க்க அரசு உதவுவதா? – விவசாயிகள் சங்கத் தலைவர் நல்லசாமி ஆவேசம்! உலகில் 108 நாடுகளில், தென்னை,பனை மரங்கள் உள்ளன! எந்த ஒரு நாட்டிலுமே கள் இறக்கவோ, பருகவோ தடையில்லை! இந்தியாவிலேயே கூட தமிழகத்தைத் தவிர ...