இந்தியாவில் வேறெங்கும் இது போன்ற சமாதி அரசியல் மற்றும் நிகழ்கால தலைவர்களுக்கு கோயில் கட்டும் அரசியல் முன்னெடுக்கப்பட்டதாக முன் உதாரணம் இல்லை! ஓட்டு அரசியல் எவ்வளவு பித்தலாட்டத்துடன் மக்களை மூடத் திசையில் கொண்டு செலுத்துக்கிறது என்பதற்கு தமிழகத்தின் சமீபத்திய நிகழ்வுகளே சாட்சி! மறைந்த தலைவர்களை வழிபாட்டுக்குரியவர்களாக – தெய்வத்திற்கு இணையாக – கட்டமைக்கும் ஓட்டுப் பொறுக்கி  அரசியலுக்கு மக்களின் வரிப்பணமும், ஊழல் செய்து சேர்த்து வைத்த கருப்புப் பணமும் முதலீடாக்கப்படுகின்றன…! அதிகாரமும், பணமும், இருப்பதால் வலுத்தவர் செய்வதெல்லாம் நியாயமாகிவிடாது..! கண்ணதாசன் ஒரு கவிதையில் சொன்னது ...