எல்லா நியாயங்களும்  தங்கள் பக்கம் இருப்பதாக தமிழக ஆட்சியாளர்கள் அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ‘சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தை அணுகி இருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ‘அரசு தரப்பில் தவறில்லை’ எனில், தயக்கம் எதற்கு? உண்மை என்னவோ, அது வெளிவரட்டுமே; ‘அரசு தரப்பில் எந்தத் தவறுமில்லை’ என்று உறுதியாக நம்பும் பட்சத்தில், சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு மருத்துவ சிகிச்சைகள் வழங்கியது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தர முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஓடோடி வந்து உதவியது என்ற வகையில்.. ...