கரூரில், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செந்தில் பாலாஜி, போட்டி வேட்பாளர்களை சுயேட்சையாக களம் இறக்கி, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவது காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுக்க பெரிய வெற்றியை பெற்றாலும், கரூர் மாவட்டத்தில் திமுகவிற்கு பலத்த அடி கிடைத்தது! மாவட்டத்தின் 12 மாவட்ட கவுன்சிலர்களில் ஒன்பது இடங்களில் அதிமுக வென்றது. மூன்றில் தான் திமுக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 115 ஒன்றிய கவுன்சிலர்களில் 70க்கும் மேற்பட்ட ...
கொங்கு மண்டலத்தை பொறுத்த வரை செந்தில் பாலாஜி தான் திமுகவின் ஒற்றை முகம்! முடிசூடா மன்னன். அவர் வைத்ததே சட்டம்! இங்கே ஒட்டுமொத்த திமுகவும், ஆட்சி நிர்வாகமும் அவர் விரலசைவுக்கு கட்டுப்படும் போது, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மட்டும் மண்டியிட மறுப்பதா..? நகர்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசும் திமுகவும் கூட்டாக களம் கண்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் என்பதால் அந்தந்த மாவட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் நடந்து வருகின்றன! தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் ...