அடுத்தடுத்து காஷ்மீர் பண்டிட்டுகளின் படு கொலைகள்! ”காஷ்மீரின் சமூக உறவுகளை புரிந்து கொள்ளாமல், அரசியல் உள் நோக்கங்களுக்காக ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் செய்யும் அரசியலே இன்று நாங்கள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, வெளியேறும்படி தள்ளப்பட்டு உள்ளோம்” என்கிறது காஷ்மீர் பண்டிட் கங்க்ரஷன் சமிதி ! காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக 10 பேர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் பணியில் இல்லாத போலீசார், 4 பேர் பொதுமக்களாவர். மீண்டும் காஷ்மீர் பண்டிட்டுகள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளது! இதைத் தான் பாஜக அரசு விரும்பியதா..? என்ற ...
உண்மைகளை ஊனப்படுத்தி, பொய்களைக் கொண்டு ஊர்வலம் நடத்துகிறது காஷ்மீர் பைல்ஸ்! இந்தப் படத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதல் நமக்கு வேண்டும்.காஷ்மீர் தொடர்பான உண்மைகளை நாம் வெளிப்படுத்த வேண்டும். காஷ்மீர் பண்டிட்களை தொடர்ந்து அகதிகளாக வைத்து பாஜக அரசியல் செய்வதை அம்பலப்படுத்த வேண்டும். ‘பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனைக் களம்’, என்ற கோவையைச் சார்ந்த அமைப்பு, ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. இதில் இலக்கியவாதியும், அரபு நாடுகளின் அரசியலை கூர்ந்து பார்ப்பவருமான இரா. முருகவேள், உரையாடினார். இசுலாமியர்களுக்கும், பெருந்தன்மையான பொதுச் ...
காஷ்மீர் மண்ணில் இந்து பண்டிட்களின் கண்ணீரும், ரத்தமும் மட்டுமா உறைந்திருக்கிறது! அதே அளவுக்கு இஸ்லாமியர்களின் இழப்புகளும் உண்டே! இந்த இருதரப்புக்குமான இணக்கத்தை சீர்குலைத்த கூட்டமே இந்த படத்தையும் எடுத்துள்ளது! அரைகுறை உண்மைகளைச் சொல்லி இஸ்லாமிய துவேஷத்தை பரப்புகிறது! அரைகுறை உண்மைகளையும் , ஆதாரமற்ற புனைவுகளையும் ஒருதலைபட்சமான காட்சி படிமங்களாக்கி ’முஸ்லீம் வெறுப்பு’ என்ற குரூர நோக்கத்திற்காக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம் காஷ்மீர் பைல்ஸ்! அதில் வெற்றியும் பெற்றுள்ளது. கலைத் திறமையும், நவீன சினிமா தொழில் நுட்பங்களும் கைகோர்த்து இந்துத்துவ நோக்கத்தை நிறைவு செய்கின்றன! காஷ்மீர் ...
தினசரி துப்பாக்கி சூடு, சுட்டுக் கொலை, போலீஸ் என்கவுண்டர் என்பதாக கடந்த 27 நாட்களில் காஷ்மீரில் 26 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகளில் இறப்பது பெரும்பாலும் பதின்பருவத்து இளைஞர்களே என்பது வேதனை…! இது போன்ற செய்திகள் நம்மை காயப்படுத்துகிறது அல்லவா? இந்த மனித இழப்புகள் ஏன் இந்த நாட்டில் தொடர்கின்றன? அதுவும் காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளாக இவை தொடர்வது ஏன்? பிரச்சினையை தீர்த்தேவிட்டோம் ;இனி தீவிரவாதமும் , வன்முறையும் தலைதூக்காது என்று அமீத் ஷா ஆகஸ்ட் 5,2019ல் அறிவித்த பின்னரும் தொடர்வது மட்டுமல்ல, ...
துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதற்காக, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவ மாணவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழும், (UAPA), 505 இந்தியன் பீனல் கோட் சட்டப்படியும் போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய ஒரு சட்டத்தை கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய இளம் மாணவர்கள் மீது போட்டுள்ளனர். இன்று, நேற்றல்ல, எனக்கு விபரம் தெரிந்தது முதல் நான் கிரிகெட்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் ...
ஆகஸ்ட் மாதம் 5 , 2019ல் அதிரடியாக அரசியல் பிரிவு 370 ரத்து, தனி அந்தஸ்து ரத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் -முதன்முறையாக- துண்டாடப்பட்டு மூன்று யூனியன் பிரதேசங்களாக சிறுமைப்படுத்தப்பட்டது. மாநில அந்தஸ்தைஇழந்த காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டது. ஊரடங்கு அமுலுக்கு வந்தது. அனைத்து அரசியல் தலைவர்களும்,தொண்டர்களும் இரவோடிரவாக கைது(பா ஜ க தவிர). இன்டரநெட் இணைப்பபிற்கு தடை,பத்திரிக்கைகள் முடக்கம், கவர்னர் போய் லெப்டின்ன்ட் கவர்னர் வந்தார் . ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஒரு சிறைச்சாலையாக மாறியது. இத்தகைய ஒருதலைபட்சமான, தான்தோன்றித்தனமான, அரசியல் சட்டம் ...