சென்னைக்குக் கூடுதல் குடிநீர் வழங்கிட, காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டுவர ரூ.5000 – ரூ6000 கோடியில் சிறப்புத் திட்டம் ஒன்று விரைவில் செயற்படுத்தப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். ஆனால், நீர்வள வல்லுநர் டாக்டர் எஸ்.ஜனகராஜன் ‘இது ஒரு தேவையற்ற வீண் செலவுத் திட்டம்” என்றும் ‘சென்னை மாநகரப் பகுதியில் ஆண்டுதோறும் பெய்யும் மழையினை (1350 மிமீ) முறையாகச் சேமித்து வைத்தாலே கூடுதலாகச் சுமார் 50 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்; சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையினை இதைக் கொண்டே நிறைவு செய்யலாம்” ...