ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மென்மையான இந்துத்துவ போக்குள்ளவர். அடிப்படையில் ராமபக்தர்! கோவில், பக்தி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். ”அவர் பாஜகவின் பீ டீம்! காங்கிரஸுக்கு மாற்றாக பாஜக அவரை வளர்த்தெடுக்கிறது. ஆகவே, ஒரு வகையில் ஆபத்தானவர்” என்ற குற்றச்சாட்டுகள் உண்மையா..? சமீப காலமாக அரவிந்த் கேஜ்ரிவால் குறித்தும், ஆம் ஆத்மி ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள், வைக்கப்படுகின்றன! அவர் பாஜகவின் மறைமுக கூட்டாளி என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது! இது குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக அலசவுள்ளோம். அரவிந்த் ...

ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்க டெல்லி அரசுக்கு அனுமதி மறுப்பு! நாளும் ஒரு நெருக்கடி மேற்கு வங்க மம்தா அரசுக்கு..! மகாராஷ்டிரா அரசுக்கு மருந்து, மாத்திரைகள் கிடைப்பதில் தடங்கல் தரப்படுகிறது! தடுப்பூசி மருந்துகள் தயாரிக்க தமிழ்நாடு அரசுக்கோ தடங்கல்கள்…! மக்கள் சேவை செய்ய மாநில அரசுகள் மத்திய அரசிடம் மண்டியிட்டு மன்றாடுவதற்கா சுதந்திரம் வாங்கினோம்..? அரவிந்த் கெஜ்ரிவால் என்ன கேட்டுவிட்டார் பாஜகவினர் அவர் மீது பாய்கிறார்கள்! அவரைத் தான் இன்றைக்கு இருப்பதிலேயே மிக ஆபத்தானவராக பார்க்கிறது பாஜக அரசு! மக்கள் நலனில் ...

ஒருவரின் யோக்கியதையை அவருடைய கூட்டாளிகளை வைத்து முடிவுக்கு வரலாம்! கமலிடமிருந்து அரவிந்த் கேஜ்ரிவாலும்,யோகேந்திர யாதவும், ’’வேண்டாம் ஐயா உம்ம சங்காத்தம்’’ என்று ஒதுங்கி போனதற்கான பின்ணணிகளை அலசுகிறது இந்தக் கட்டுரை! தன்னை நேர்மையாளராக தானே பிரகடனப்படுத்திக் கொண்டவர் கமலஹாசன்! வருமானத்திற்கு நேர்மையாக வரி கட்டுபவராகவும் சொல்கிறார்! நேர்மையான ஆட்சியை தன்னால் தான் தரமுடியும் என்கிறார்! ஒருவர் நேர்மையாளரா…? என்பதை பொதுவாக அவருடைய கூட்டாளிகளைக் கொண்டே ஒரு தெளிவுக்கு நாம் வரமுடியும். கட்சி தொடங்கும் போது அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, பினராய் ...