ஊசலாடிய குஷ்பு, உறுதிப்படுத்தினார் காங்கிரஸை! அந்த மட்டுக்கு தற்போதைய சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளியை பலமாக வைத்துவிட்டார். குஷ்பு நல்ல பிரச்சாரகர்,சிறந்த புத்திசாலி,அரசியல் அறிவுமுள்ளவர்! ஆனால், சந்தர்ப்பவாத குணமுள்ளவர் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். கடந்த சில மாதங்களாக அவர் பாஜகவில் சேர்வதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததை யடுத்து, அவருக்கு காங்கிரசில் தனக்கான இடத்தை உறுதி செய்வதற்காக கட்டாயம் ஏற்பட்டு விட்டது. அதை நேற்றைய வடசென்னை ஆர்ப்பாட்டத்தில் சிறப்பாகவே செய்துவிட்டார். அதே சமயம் கடந்த சில மாதங்களாக அவர் பாஜகவில் சேர்வதற்கு எடுத்த பிரயத்தனங்கள் தெரிய வந்தவர்களுக்கு குஷ்புவின் நேற்றைய பேச்சுகள் குழப்பமாகவோ,அதிர்ச்சியாகவோ கூட இருக்கலாம்! ஆனால்,அவரது ...