சென்னை அநியாயத்திற்கு விரிந்து பரந்து,பிதுங்கி வழிகிறது! ஐம்பது ஆண்டுகளாக சென்னையில் வசிப்பவன் என்ற வகையில், பெருத்துக் கொண்டே போகும் சென்னையும், போக்குவரத்து நெரிசல்களும் என்னை அச்சுறுத்துகிறது. நகர விரிவாக்கம் என்பது நரக விரிவாக்கமாகவே என்னால் உணர முடிகிறது! சென்னையை சுற்றியிருந்த விவசாய நிலங்களெல்லாம்  விழுங்கப்பட்டுக் கொண்டே வருவதை ஆண்டுதோறும் பார்த்து அதிர்ந்த வண்ணம் உள்ளேன்! உலக தரத்திலான சாலை வசதிகளோ, பேருந்து நிலைய வசதிகளோ நமக்கு மகிழ்ச்சியை தரலாம். ஆனால், உண்மையில், அவை, மகிழ்ச்சிக்குரியவை தானா…? என்ற மறு பரிசீலனை தற்போது அவசியமாகிறது! இந்த ...