கீழடி ஆய்வில் பாஜக அரசு செய்து கொண்டிருப்பது பெரிய துரோகம். அதை தகர்க்க, தமிழ்ச் சமூகம் நீதிமன்றத்தை  நாடியது. ஆய்வை பாதியிலேயே நிறுத்தியது பாஜக அரசு. பிறகு ஆய்வறிக்கை எழுதாமலே அமர்நாத்தை தூக்கி அடித்தது.பிறகு எழுதியதை பொது வெளியில் வைக்க மறுத்தது. இப்படி துரோகம் இழைத்தது பாஜக மட்டும் தானா? சங்ககாலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை  கீழடி அகழாய்வு மாற்றியமைத்துள்ளது. இரப்பா் ஸ்டாம்ப்பாக உபயோகப்படுத்திய சுடுமண் முத்திரை கட்டைகள், அழகிய எழுத்தாணிகள், சண்டைக்கான அம்புகள்,  நாகரீகத்தின் முதல் அடையாளமான இரும்பு, செம்பு ஆயுதங்கள், ...