வன்மமே வடிவமாக, வெறுப்பே வேலை திட்டமாக, ஒரு குறிப்பிட்ட சாதி மேலாதிக்கத்தை உறுதிபடுத்துவதையே உள்ளார்ந்த இயக்கமாகக் கொண்டு வெளிவரும் ஒரே நாளிதழ் உலகத்திலேயே தினமலராகத் தான் இருக்கும். உள் நோக்கங்களுக்கு கற்பனை வடிவம் தந்து தலைப்பு செய்தியாக்கும் – இதழியல் தர்மத்திற்கே எதிரான – போக்குகளை அனுதினமும் செய்து மக்களிடையே குழப்பத்தையும்,கொந்தளிப்பையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது தினமலர்! சுருங்க சொல்ல வேண்டுமென்றால், உலகில் உள்ள தீமைகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து பார்த்தால் அது தினமலராக வெளிப்படுவதை உணரலாம். விலை போகக் கூடிய அரசியல் தலைவர்களை ...