ஒரு பத்திரிகையாளனாக இருந்தாலும், தற்போது தொலைகாட்சி பார்ப்பதை பெருமளவு தவிர்த்து வருகிறேன்! அப்படியே பார்க்க நேர்ந்தாலும் கொரோனா தொடர்பான செய்திகள், காட்சிகளே தொடர்ந்து வந்தால் சேனலை வேகமாக மாற்றி விடுகிறேன். செய்திகளில் 90 சதவித்தை கொரானா பரவலுக்கு ஒதுக்கியுள்ளன ஊடகங்கள்! கொரானா தவிர்த்த எதுவும் தற்போது அவர்களுக்கு முக்கிய செய்தியாக தெரிவதில்லை போலும்..! மறுக்கவில்லை. தற்போது கொரானா செய்திகள் தவிர்க்க முடியாதவை தான்! ஆனால், ‘எந்த அளவுக்கு அவற்றைச் சொல்ல வேண்டும்?’ ‘எந்தப் பார்வையில் அவற்றை அணுக வேண்டும்.’ ‘எந்த தொனியில் அவற்றை வெளிப்படுத்த ...