இந்தியாவின் உச்சபட்ச ஸ்டார்களுக்கு இல்லாத ஒரு மிகப் பெரிய மதிப்பும், மரியாதையும் நடிகர் சோனுசூட்டுக்கு உருவாகிக் கொண்டுள்ளது! இருபது வருடங்களாக திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய ஹீரோ இல்லை! பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்கள் தான்! அதுவும் எண்ணி 71 படங்கள் தான்! தெலுங்கானாவின் சித்திபேட் மாவட்ட துபதண்டா ஆதிவாசிகள் சோனு சூட்டுக்கு கோயில் கட்டியுள்ளனர்! ஆந்திராவில் ஒரு சரத்சந்திரர் பெயரிலான ஒரு பெரிய கல்வி நிறுவனம் பல்கலை கழகம் தொடங்கி கல்லூரி வரை ஒரு துறையின் பெயரையே சோனுசூட் என்று பெயரிட்டுள்ளது. ஏன்? எதற்கு என ...