திரு கே ஆர் நாராயணன் நூற்றாண்டு விழா நினைவேந்தல் கட்டுரை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும்,சிறந்த கல்வியாளருமான மறைந்த திரு கே ஆர் நாராயணன் அவர்களின்  நூற்றாண்டு விழா தருணத்தில் தேசம் தனது தலை சிறந்த தலைவனை நன்றிப் பெருக்கோடு நினைவு கொள்கிறது. தற்போது கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூரில் ஒரு தலித் குடும்பத்தில் 1920 அக்டோபர் திங்கள் 27ம் நாள் பிறந்தார் நாராயணன். தனது கல்வியின் மூலம் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் போல பெரும் கற்றறிந்த அறிஞராக அவர் உருவானார். கல்வியை ...