இந்தியாவின் மாபெரும் நிகழ்வான ஹரித்துவார் கும்பமேளா ஏப்ரல் ஒன்று தொடங்கி முப்பது நாட்கள் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக தற்போதே உத்திரகாந்த் மாநிலத்தின் ஹரித்துவாரில் 32 லட்சம் பேர் வந்து குழுமியுள்ளனர். இந்த 30 நாட்கள் நிகழ்வில் 12 முதல் 15 கோடி வரைக்குமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 வருடங்களுக்கு மட்டுமே நடக்கும் கும்பமேளா என்பதால் மக்களின் எதிர்பார்ப்பும், ஆர்வமும் எல்லை மீறியதாகவே இருக்கும் என நம்பப்படுகிறது! இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது என ...