குஷ்புவின் பொய்கள்…..ஒன்றா, இரண்டா? பொய்,புரட்டு,வேஷம்…இதுவே அரசியல்! பணம்,பதவி,அதிகாரம் இதுவே குறிக்கோள்…! இதுவே இன்றைய செய்தியாளர் சந்திப்பில் குஷ்பு நமக்கு தந்துள்ள செய்தியாகும்! ’’நாட்டுக்கு நன்மை செய்வதற்குத் தான் கட்சியில் சேர்ந்துள்ளேன்…’’ ’’எனக்கு ஐந்து நாட்கள் தான் சூட்டிங்…மற்ற இருபத்தி ஐந்து நாட்கள் என்னை ஏன் கூட்டத்திற்கு காங்கிரஸார் அழைக்கவில்லை…’’ ’’இருக்கும் வரை இருந்த இடத்திற்கு விசுவாசமாக இருந்தேன்…’’ ’’என்னைய அவங்க நடிகையா தான் பார்த்தாங்க…அரசியல்வாதியாகப் பார்க்கலை..இதுல இருந்தே அவங்க( காங்கிரஸ்) சிந்தனையை நீங்க புரிஞ்சிக்கலாம்…’’ ’’என் பேச்சைக் கேட்க, எனக்காக மக்கள் கூட்டம் கூடும்’’ ’’நான் பத்து வருஷமாக அரசியலில் இருக்கேன்…எங்கேயாவது என் கூட என் கணவரைப் பார்த்திருக்கிறீர்களா’’ ’’நான் ...