தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களை உரிமையற்றவர்களாக்குகிறது. தொழிற்சங்கங்களை முடமாக்குகிறது.தொழிலாளர்களை முற்றிலும் பாதுகப்பற்றவர்களாக ஆக்கியுள்ளது. இது போன்ற மோசமான சட்டங்களை நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அரசே கூட நினைத்துப் பார்த்திருக்காது! இந்தச் சட்டங்கள்  உணர்ச்சியுள்ள எந்த தொழிலாளியையும் எரிமலையாக்கும் என்பது நிச்சயம்…..! நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், மூன்று முக்கியமான தொழிலாளர் சட்டங்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.. அதுவும் வேளாண் சட்டங்களை அரசு நிறைவேற்றிய முறையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கூண்டோடு அவை புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த போது சந்தடி சாக்கில் விவாதங்களேயின்றி இந்தச் சட்டங்கள் ...