புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ், விதிகளை உருவாக்குவதற்கான கூட்டத்தை தொழிற்சங்கங்கள் புறக்கணித்தன ! பெங்களூருவில், விஸ்ரான் தொழிற்சாலையில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் ஆலை அடித்து நொறுக்கப்பட்டது.வாகனங்கள் எரிக்கப்பட்டன.148 பேர் கைது செய்யப்பட்டனர்.அதற்கு காரணம் அங்கு தொழிலாளர்களின் பிரச்சினையைப் பேச சங்கம் இல்லாததுதான். நிரந்தரத் தொழிலாளர்களை விட ஆறு மடங்கு ஒப்பந்த தொழிலாளர் இருந்தால் அங்கு எப்படி தொழில் அமைதி நிலவும் ? இந்தக் கலவரமான சூழலைத்தான் நாடு முழுவதும் உருவாக்கவிருக்கிறது மத்திய அரசு இயற்றியுள்ள புதிய தொழிலாளர் சட்டம். அரசு ஏற்கனவே இருந்த 44 ...
மத்திய பாஜக அரசு இருக்கிற தொழிலாளர் நலச் சட்டங்களை தூக்கி குப்பையில் எறிந்துவிட்டு, புதிய தொழிலார் சட்ட மசோதாவை விவாதமின்றி, அவசர,அவசரமாக கொண்டு வந்து பாராளுமன்றத்தில் விவாதத்திற்கே வைக்காமல் நிறைவேற்றியுள்ளது.இதனால் இது நாள் வரை தொழிலாளர்கள் பெற்று வந்த உரிமைகளும்,பாதுகாப்பும் இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது. 1880 களில் அமெரிக்கா தொடங்கி ஒவ்வொரு நாட்டிலும் நாளொன்றுக்கு 12 மணி நேரம், அல்லது 10 மணி நேரம் பணியாற்ற முடியாது என்று ரத்தம் சிந்தி, பல உயிர்களை இழந்து,போராடிப் பெற்றதே எட்டு மணி நேர வேலை ...