என்ன அப்படியொரு கோபமோ…, பாஜக அரசுக்கு தொழிலாளர்கள் மீது? புதுசா எந்த உரிமையும் அவர்கள் தொழிலாளர்களுக்குத் தர வேண்டாம்…ஆனா, இருக்குற உரிமைகளைக் கூட ஒவ்வொன்றாக காலி பண்றாங்க…கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம் புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களுக்கு தற்போது கிடைத்து வரும் அரைகுறை பாதுகாப்புகளையும் பறித்துவிடுகின்றன,. மேலும்,முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்கள் விரிவாக்கப்பட்டும்  உள்ளன. இந்திய வேலைவாய்ப்பு கட்டமைப்பில், அமைப்புசார் வேலை வாய்ப்புகள் 10 விழுக்காடு தான் உள்ளன. இதுவரை ஒரளவு பாதுகாப்புடம் இருந்த அந்த தொழிலாளர்களையும் பாதுகாப்பற்ற தன்மைக்கு மாற்றுவதுடன், உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தக் கூடியதாக ...