புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ், விதிகளை உருவாக்குவதற்கான கூட்டத்தை தொழிற்சங்கங்கள் புறக்கணித்தன ! பெங்களூருவில், விஸ்ரான் தொழிற்சாலையில்  சமீபத்தில் நடந்த கலவரத்தில் ஆலை அடித்து நொறுக்கப்பட்டது.வாகனங்கள் எரிக்கப்பட்டன.148 பேர் கைது செய்யப்பட்டனர்.அதற்கு காரணம் அங்கு தொழிலாளர்களின் பிரச்சினையைப் பேச சங்கம் இல்லாததுதான். நிரந்தரத் தொழிலாளர்களை விட ஆறு மடங்கு ஒப்பந்த தொழிலாளர் இருந்தால் அங்கு எப்படி தொழில்  அமைதி நிலவும் ? இந்தக்  கலவரமான சூழலைத்தான்  நாடு முழுவதும் உருவாக்கவிருக்கிறது மத்திய அரசு இயற்றியுள்ள புதிய தொழிலாளர் சட்டம். அரசு ஏற்கனவே இருந்த 44 ...