இருபதாண்டு கால அந்நியர் ஆக்கிரமிப்பு! ஆட்சியாளர்களின் அதி மோசமான முறைகேடுகள்! அமெரிக்க ஆதரவுள்ள படித்த மேல்தட்டுவர்க்கத்தின் ஆடம்பரமான, ஊதாரித்தனமான வாழ்க்கை.. போன்றவற்றை பார்த்து வெறுத்துப் போயிருந்த மக்களில் சிலர், ‘கொள்கை வெறியுடன் மலைமுடுக்குகளில் மறைந்திருந்து உயிர் கொடுத்து போராடிய தாலிபான்கள் வந்தால் வரட்டுமே’ என்று நினைத்தது உண்மைதான்! ஆனால், தற்போது பெண்களை ஒடுக்க துடித்த தாலிபான்களை எதிர்க்க துணிந்துவிட்டனர் பெண்கள்! சட்டம் ஒழுங்கு எதுவுமில்லை; கேள்வி கேட்க முடியாது; தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்! யார் உயிருக்கும் உத்திரவாதமில்லை. யார் வீட்டுக்குள்ளும் அத்துமீறி நுழைந்து சோதனை ...
கைதிகளை சித்திரவதை செய்வதில், இந்தியாவில் உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது ! இப்போதுள்ள சிறைகள், அடிமை ஆட்சி கால சிறைகளை விட மோசமாக உள்ளன. எமர்ஜென்சி சிறைக்கொடுமைகளை ஆராய்ந்த ‘இஸ்மாயில் ஆணையத்தின்’ பரிந்துரைகள் இன்னும் அமலாக்கப்படவில்லை..! ‘சிறைகளில் தொடரும் சித்திரவதைகள்’ என்ற பொருளில், வாழ்நாள் சிறைவாசியாக இருந்த தியாகு, சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசினார். “மன்னன் காலத்தில் யானைக்காலால் இடற வைத்து மரண தண்டனை அளிக்கப்பட்டது; தேர்க்காலில் ஏற்றியும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு மாற்றாகத்தான் இப்போதைய சிறைகள் இருக்கின்றன. சமூக ...
”ஒருவரின் தனிப்பட்ட பலவீனத்தை முன்வைத்து அவரது இலக்கிய, கலை ஆளுமை திறமைக்கான விருதினை தரக்கூடாது என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது.. ”என்கிற வாதம் பரவலாக முன்வைக்கப்படுகிறது!. பாடகி சின்மயி உட்பட பதினேழு பேர் வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் புகார் செய்துள்ளனர். இது தெரிந்தும் அவருக்கு எப்படி விருது வழங்கலாம் என்ற பெண்களின் வலியை இப்படித் தான் மடார் என ஒரே போடில் தவிடு பொடியாக்கிவிடுகின்றனர்,சிலர்! மேம்போக்காக பார்க்கையில் இந்த வாதத்தில் நியாயம் இருப்பதாகவே தோன்றும். ஆனால் வைரமுத்துவுக்கு தரப்பட்ட விருது கார் ...