துன்பங்கள் ஆயிரம், வலிகளோ அதிகம், மரணமோ வெகு நெருக்கம்…! ஆயினும் வாய் திறக்காமல் தங்களுக்குள் எல்லாவற்றையும் புதைத்துக் கொண்டு கணவனிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாதவர்களாக நமது பெண்கள் இறுக்கமாக உள்ளனர் என்பதை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் மூலம் விளக்கினார் டாக்டர்.சுரேந்திரன்..! சென்னையில் வசிக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயும் அதிகளவு இருப்பது ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது. இன்று மகளிர் தினத்தை ஒட்டி மேடைக்கு வந்து பேசிய ஆசிரியைகளை பார்த்தேன். அனைவருமே சராசரி உடல் எடையைவிட அதிக பருமன் ...