ஆதிவாசிகள் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டு வருவதை தோலுரித்துக் காட்டும் சிறந்த அரசியல் திரைப்படம்! தங்கள் நிலவுரிமையை மீட்டெடுக்க நான்கு ஆதிவாசி இளைஞர்கள் நிகழ்த்திய அதிரடி சாகஸம் தான் இந்தப் படம்! சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிஜ சம்பவம் தான் தற்போது சினிமாவாகியுள்ளது! ‘ பட’  மலையாளப்படம் தற்போது பிரைம் தளத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது. பட என்ற சொல்லுக்கு படை என்பது பொருள். ‘அய்யங்காளி படை’ என்ற அமைப்பைச் சார்ந்த நான்கு பேர் மாவட்ட ஆட்சித்தலைவரை,  அவரது அலுவலகத்திலேயே  பணயக் கைதியாக்கி வைத்திருக்கிறார்கள். ...

நம்பவே முடியவில்லை. ஆனால், நடப்பவற்றை பார்க்கும் போது நம்பத்தான் வேண்டும். அரசாங்கத்தை விட சில தனி நபர்கள் சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பது அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சட்டம், நீதி, தர்மம், அரசாங்கம் எதற்கும் கட்டுப்படாத சாஸ்த்ரா பல்கலைக் கழக விவகாரங்களே சாட்சியாகும்! இந்தியாவில் இரண்டு விதமான சக்திகள் என்ன குற்றம் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவதே இல்லை.ஒன்று, அம்பானி, அதானி போன்ற பெரும் தொழில் அதிபர்கள்!  இவர்கள் எல்லா சட்டங்களையும் மீறுவார்கள்! அரசு சொத்துக்களையே அபகரிப்பார்கள். ஆயினும், இவர்கள் தண்டிக்கப் படமாட்டார்கள். மாறாக, ...