மாணவி லாவண்யா விஷமருந்தி  உயிர் இழந்தது சம்மந்தமான குற்றப்புலனாய்வை தமிழக காவல்துறையிடமிருந்து , மத்திய  புலனாய்வுத்துறைக்கு (CBI) மாற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பை பற்றி ஆதியோடந்தமாக அலசி விமர்சிக்கிறார் நீதிபதி ஹரிபரந்தாமன்! மாணவி லாவண்யா, தஞ்சை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில். 8 -ஆம் வகுப்பிலிருந்து ஐந்து ஆண்டுகள் அப்பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்தார். ஜனவரி 9 அன்று மாலை அவர் விடுதியில் வாந்தி எடுத்ததற்கு ஆரம்ப சிக்கிச்சை தந்த விடுதி நிர்வாகத்தினர், மாணவியின் தந்தைக்கு தகவல் அளித்து மாணவியை அழைத்து ...