சட்டத்திற்கு அப்பாற்பட்டு செயல்பட சட்டபூர்வமாக தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு பெயர் தான் பி.எம்.கேர்ஸ் பண்ட்! ”அரசாங்கத்தின் அதிகாரம் எங்களுக்கு தேவை! ஆனால், அரசின் சட்டங்கள்,கட்டுப்பாடுகள் எங்களுக்கு தேவையற்றது! எங்களை தணிக்கைதுறை கட்டுப்படுத்தக் கூடாது. தகவல் அறியும் உரிமை சட்டம் கேள்வி கேட்கக் கூடாது! இப்படி தானடித்த மூப்பாக செயல்படுவதற்கான ஒன்றை உருவாக்கி கல்லா கட்டத்தானே பதவிக்கே வந்தோம்..” என்பவர்களிடம் என்ன பேச முடியும்? நாட்டுத் தலைமையே இந்த லட்சணம் என்றால், அப்புறம் தனி முதலாளிகளை யார் கேட்பது..? கொரோனா தொடர்பான ஆராய்ச்சி ...