40 கோடி மக்களின் சேமிப்பை உள்ளடக்கிய மாபெரும் அரசு நிறுவனம் எல்.ஐ.சி! அபார லாபம், அனைத்து தரப்பின் நம்பிக்கை, அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பங்களிப்பு..என ஆல் போல தழைத்தோங்கி நிற்கும் எல்.ஐ.சியை பலவீனப்படுத்தி, சீர்குலைத்து, இந்தியாவை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வேட்டைக் காடாக்க மாற்ற முயற்சிக்கிறது பாஜக அரசு..! எல்.ஐ.சி.கைவிட்டுப் போவதை அனுமதித்தால் என்னென்ன கெடு விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்று விளக்குகிறது இந்தக் கட்டுரை! எல்.ஐ.சி.என நாட்டு மக்களால் அழைக்கப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ,நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு ...

இது நாள் வரையில்லாத அளவுக்கு புதுப்புது நெருக்கடிகளைத் தனது வாடிக்கையாளர்கள் மீது திணிப்பதன் மூலம் எல்.ஐ.சி.யின் வாடிக்கையாளர்களான ஏழை,எளிய மக்களின் பல லட்சம் பாலிசிகள் காலாவதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது! கடந்த மார்ச் 24 ந்தேதி  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னும் அது முழுமையாக விலக்கிக்  கொள்ளப் படவில்லை. தொழில் ,பணி என்று சகலமும் தொய்வடைந்து மக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர். குறிப்பாக ,கீழ்த்தட்டு, நடுத்தர பொருளாதாரப் பிரிவில் வாழும் மக்கள் வயிற்றை  வாயைக்கட்டி வாழ்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் இணுக்கி இணுக்கி செலவழிக்கிறார்கள். வீட்டுக் கடன்,  வாகனக் கடன்,  இ .எம். ஐ. செலுத்த கால நீட்டிப்பு ...