இது நாள் வரையில்லாத அளவுக்கு புதுப்புது நெருக்கடிகளைத் தனது வாடிக்கையாளர்கள் மீது திணிப்பதன் மூலம் எல்.ஐ.சி.யின் வாடிக்கையாளர்களான ஏழை,எளிய மக்களின் பல லட்சம் பாலிசிகள் காலாவதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது! கடந்த மார்ச் 24 ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னும் அது முழுமையாக விலக்கிக் கொள்ளப் படவில்லை. தொழில் ,பணி என்று சகலமும் தொய்வடைந்து மக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர். குறிப்பாக ,கீழ்த்தட்டு, நடுத்தர பொருளாதாரப் பிரிவில் வாழும் மக்கள் வயிற்றை வாயைக்கட்டி வாழ்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் இணுக்கி இணுக்கி செலவழிக்கிறார்கள். வீட்டுக் கடன், வாகனக் கடன், இ .எம். ஐ. செலுத்த கால நீட்டிப்பு ...