இன்னும் கூட தன் தோல்வியை ஏற்க மறுத்து டிரம்ப் சட்ட போராட்டம் நடத்தப் போவதாக சொல்கிறார்…! அகில உலகமும் ஒரு உண்மையை ஒப்புக் கொண்ட போதும் அதை தான் மட்டும் ஏற்க முடியாது என்று டிரம்ப் பிடிவாதம் காட்டுகிறார் என்றால், அது ஏதோ அவர் இப்போது தான் அப்படி சொல்வதாக நினைத்து விடக் கூடாது! அவருடைய கடந்த கால வரலாறுகளை பார்த்தால், அது, ’தான் திருடன் பிறரை நம்பான் கதை’யாகத் தான் இருக்கிறது! ’’பிராடுத்தனம் என்பது ரொம்ப,ரொம்ப பொதுவானது, சகஜமானது தானே..’’ என்பது தான் ...