தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை மாநிலம். ஆயினும்,  காவிரியிலும், தாமிரபரணியிலும் இரண்டாண்டு அல்லது  நான்காண்டுகளுக்கொருமுறை பெருமழை பெய்து மிகையான வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இக்கூடுதல் மிகை வெள்ளப் பெருக்கு ஏறக்குறைய 260 டிஎம்சி அளவுக்கு ஏற்பட்டு – பயனின்றி வீணே கடலில் கலக்கின்றது. காவிரியில் மட்டும் இந்த கூடுதல் வெள்ளப் பெருக்கு நான்காண்டுகளுக்கொருமுறை 100 டிஎம்சிக்கு மேலிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் நீர்வள வல்லுநர்களும், சமுதாய அக்கறையாளர்களும் தமிழ்நாட்டின் ஆறுகளில் கிடைக்கும் மிகை வெள்ள நீரை வீணே கடலுக்குள் விடாமல் அவற்றை வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு ...