எவ்வளவு பெரிய அவமானம்! கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத அவலம், கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமை இவற்றின் விளைவாக, ”குற்றவுணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன்…” என ஸ்டாலின் சொன்னது ஒரு நெகிழ்ச்சியைத் தந்தாலும், உள்ளாட்சி தேர்தலை திமுக தலைமை அணுகிய விதத்தில் தொடங்குகிறது எல்லாமே! உள்ளாட்சி அமைப்புகள் அவற்றுக்குரிய பூரண சுதந்திரத்துடன் இயங்க அனுமதிப்பதே ஒரு முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை என்றாலும், அதை நடைமுறைப்படுத்த இன்றைய கட்சித் தலைமைகளின் சர்வாதிகார கண்ணோட்டங்கள் ஒத்துழைப்பதில்லை. ‘அடிமட்டம் ...

உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது திமுக! மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றிவிட்டது! நகராட்சிகளில் 138ல் 133 ஐ வென்றுள்ளது. 489 பேரூராட்சிகளில் 400 க்கும் மேற்பட்டவற்றை வென்றுள்ளது. கொங்கு  மண்டலத்தில் கோலோச்சிய அதிமுகவையும், பாஜகவையும் மிகவும் பின்னுக்கு தள்ளியுள்ளது! இமாலய வெற்றி தான்! ஆனால், இந்த வெற்றியை ஈட்ட திமுக கையாண்ட முறைகள், இந்த தேர்தலை ஆளும் கட்சி அணுகிய விதம் போன்றவற்றை உள்ளட்டக்கித் தான் இந்த வெற்றியை நாம் பார்க்க வேண்டியுள்ளது..! நாடாளுமன்ற சட்டமன்ற, தேர்தலின் போது பாஜக எதிர்ப்பும், ...

ஆறாக பெருக்கெடுத்து ஓடும் பணம்! அள்ளித் தரப்படும் பரிசுப் பொருட்கள்..என  ஏதோ, பெரு வியாபாரத்திற்கான முதலீட்டைப் போல, ஊரக நகராட்சி தேர்தல்களை அரசியல் கட்சிகள் கையாளும் அணுகுமுறைகள் அதிர்ச்சியளிக்கின்றன! இவற்றைப் பார்க்கும் போது உள்ளாட்சி அமைப்புகளின் தேவைக்கும், உரிமைக்கும் பல ஆண்டுகளாக எழுதியும், பேசியும் வரும் நம்மைப் போன்றவர்களுக்கு அயர்ச்சியே ஏற்படுகிறது! நம்மை நாமே சுரண்டிக் கொழுப்பதற்கு தரும் அங்கீகாரமா உள்ளாட்சி தேர்தல்கள் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை. சாதாரண வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள்! இது தொண்டு செய்வதற்கான ...

கரூரில், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செந்தில் பாலாஜி, போட்டி வேட்பாளர்களை சுயேட்சையாக களம் இறக்கி, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவது காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுக்க பெரிய வெற்றியை பெற்றாலும், கரூர் மாவட்டத்தில் திமுகவிற்கு பலத்த அடி கிடைத்தது! மாவட்டத்தின் 12 மாவட்ட கவுன்சிலர்களில் ஒன்பது இடங்களில் அதிமுக வென்றது. மூன்றில் தான்  திமுக வெற்றி பெற்றது.  மொத்தம் உள்ள 115 ஒன்றிய கவுன்சிலர்களில் 70க்கும் மேற்பட்ட ...

எம்.சத்தீஸ், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு உள்ளாட்சி தேர்தல்கள் எப்படிப் போய்க் கொண்டுள்ளது? அடேங்கப்பா! பல உள்குத்துக்களோடு போய்க் கொண்டுள்ளது! திமுக கூட்டணி தொடர்கிறது. எனினும்,பல இடங்களில் போட்டி வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை! அடித்தளத்தில் பலம் பொருந்தி நிற்பவனை கட்சிகளின் தலைமைகள் அச்சுறுத்தலோடு தான் பார்க்கின்றன! அதிமுகவால் கூட்டணி கூட்டணி காண முடியாமல் போனதற்கு முக்கிய காரணம், அந்த கட்சித் தலைமைக்கு யாரும் கட்டுப்படமாட்டார்கள் என்ற கள நிலைமை தான்! அதிமுகவின் அதிருப்தி வேட்பாளர்களை அள்ளீச் செல்வதற்காகத் தான் பாஜக தனித்து ...

எஸ்.லஷ்மி, காஞ்சிபுரம் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளதே? வாழ்த்துகள்! ஆளும் கட்சியின் விஸ்வரூப வெற்றி, ஜனநாயகத்தின் வீழ்ச்சியாக மாற வாய்ப்புண்டு! ஆர்.நாராயணன், ஆத்தூர், சேலம் மனித வெடிகுண்டு தாக்குதல் என்றெல்லாம் வன்முறையைத் தூண்டும் வகையில் சாட்டை துரைமுருகன் சீமானை வைத்துக் கொண்டே பேசியிருப்பது பற்றி? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சட்டம், ஒழுங்கிற்கு மொத்த குத்தகையாளராக காட்டிக் கொள்ளும் தமிழக பாஜக, இதில் அமைதியாக ரசிப்பதை கவனியுங்கள்! மு.பாண்டியன், அனுப்பானாடி, மதுரை திமுகவின் சீனியர் தலைவர் துரைமுருகன் ...

ஊராட்சி தேர்தல் அறிவிப்பு வந்தது தொடங்கி அரசியல் கட்சிகள் பரபரப்பு அடைந்துள்ளன! கட்சி செல்வாக்கோ, கட்சித் தலைமையின் செல்வாக்கோ கருதி விழும் ஓட்டுகளை விட ஒருவர் உள்ளூருக்கு உண்மையாக உழைக்கக் கூடியவரா.? என மக்கள் கணித்து ஓட்டுப் போடும் ஒரே தேர்தல் இது தான்! இந்த தேர்தலை எதிர் கொள்வது எப்படி..? மகிழ்ச்சி! நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிறுத்தப்பட்டிருந்த ஒன்பது மாவட்டத்தில் ஊராட்சி தேர்தல் வரவுள்ளது! விழுப்புரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், அவற்றிலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, ...