எஸ்.கண்ணப்பன், சேத்தியாதோப்பு, கடலூர். கூட்டணி தர்மத்தை காப்பாற்றுவதில் முதல்வர் முன்னிலையில் உள்ளார் என கூட்டணிக் கட்சிகள் புகழ்ந்து தள்ளுகிறார்களே? கூட்டணிக்கு மட்டும் தான் தர்மம் உள்ளதா? உள்ளாட்சியில் வெற்றி பெற்று வந்தவர்களுக்கு தங்கள் ஊருக்கான தலைவரை தாங்களே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை பறிப்பது தர்மமா? மேலிடத்து அதிகாரத்தின் மூலம் உள்ளாட்சிகளில் செல்வாக்கில்லாத இடங்களில் தங்கள் கட்சிக்கான தலைமையை வலிந்து திணிக்கும் கூட்டணித் தலைவர்களுக்கு தர்மத்தின் பொருள் தெரியுமா? எளிய கட்சிக்காரனின் உரிமையை பறிப்பது தர்மமா? அ.அறிவழகன், மயிலாடுதுறை நீட் தேர்வால் தான் வெளிநாடுகளுக்கு மாணவர்கள் படிக்க ...

அப்பப்பா என்னென்ன பேரங்கள், காய் நகர்த்தல்கள்! மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு கன்னாபின்னா குதிரை பேரங்கள்! வரப்போகிற உள்ளாட்சி நிர்வாகம், தரப்போகிற சேவை எப்படி நேர்மையாக இருக்கும்? ஏன் இந்த மறைமுக தேர்தல் திணிப்பு? யாருக்கு ஆதாயம்? மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களும், அந்தந்த மாவட்டத்தின் முக்கிய புள்ளிகளும் அவரவர் ஆதரவாளருக்கு பதவிகளை வாங்கித் தருவதில் பகிரங்க பிரயத்தனம் செய்து வருகின்றனர். இதில் தோற்றுப் போகிறவர்களுக்கு இது ஒரு கவுரவ பிரச்சினையாகவும் வாய்ப்புள்ளது. மன வருத்தங்கள் வளரவும் வாய்ப்புள்ளது.அது மட்டுமின்றி ...

உள்ளாட்சி தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. ஆகவே, வெறும் சதவிகித கணக்குகளைச் சொல்லி அதை இன்னும் அலட்சியப்படுத்த முடியாது என்ற பேச்சுகள் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. உள்ளபடியே தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி குறித்து என்னவென்று பார்ப்போம். உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றியை விரிவாக பார்ப்போம் 21 மாநகராட்சிகளில் மொத்தமாகவுள்ள 1,374 இடங்களில் பாஜக 22 வார்டுகளை வென்றுள்ளது. 138 நகராட்சிகளில் மொத்தமுள்ள 3,843 இடங்களில் பாஜக 56 இடங்களை வென்றுள்ளது. 490 பேரூராட்சிகளின் மொத்தமுள்ள 7,621 இடங்களில் 230 இடங்களை வென்றுள்ளது. ஆக சதவிகித ...

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜகவிடையே இணக்கம் உருவாகவில்லை. ”பாஜக அதிகம் எதிர்பார்க்கிறது” என அதிமுகவும், ”அலட்சியப் படுத்தினால் அனுபவிக்க வேண்டும் தயாரா..?” என பாஜகவும் சொல்கின்றன! என்ன நடக்கிறது? நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் தொடர்பாக அதிமுக, பாஜக இடையேயான பேச்சுவார்த்தை நான்கு மணி நேரம் நீடித்தும் நல்ல முடிவுக்கு வர முடியவில்லை. பாஜகவை பொறுத்த வரை உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றினால் தான் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த முடியும். கட்சியில் வசதி படைத்த தொழில் அதிபர்கள், வியாபாரிகள் உள்ளூர் ...

க.செபாஷ்டின், வேலூர் எட்டி உதைக்கும் பாஜகவின் பாதங்களை தட்டிவிடத் தைரியமின்றி தவிக்கிறதே அதிமுக தலைமை? களவாணிகளை எப்படி நடத்துவது என்பது காவல்துறைக்கு கைவந்த கலை! கையூட்டுக் பெற்றாலும், காவல்துறை அதன் புத்தியை காட்டும் என்பதால், களவாணிகளுக்கும் தெரியும் தங்கள் நிலை! வேறொன்றும் சொல்வதற்கில்லை. அ.அறிவழகன், மயிலாடுதுறை உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை உதாசீனப்படுத்துகிறதே திமுக? உள்ளூர் கட்சிக் கட்டமைப்பில் பலவீனமாக உளுத்துப் போய் கிடக்கும் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் கூட தனித்து களம் காண முடியாத நிலையில்…, ‘உதாசீனப்படுத்தப்பட்டாலும் கூட ஓடிப் போய்விடமாட்டார்கள்’ என்பது ...

அதிமுக அரசு உள்ளாட்சி விவகாரங்களை அணுகியதைப் போலவே, திமுக அரசும் தற்போது அணுகுகிறது. கிராம சபை கூட்டங்கள் ரத்து, உள்ளாட்சி தேர்தலை ஆனவரை தள்ளிப் போடுவது, உள்ளாட்சி அதிகாரங்களை ஊனப்படுத்துவது…என்பது தொடர்கதையா..? முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளான சென்ற ஞாயிற்றுகிழமையில் வடபழனி உள்ளிட்ட தமிழகத்தின் பல கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றன. அதில் அமைச்சர்கள், விஐபிக்கள் பங்கேற்றனர். அதே போல முதல்வர் ஸ்டாலினே அறிவாலயத்தில் திமுக நிர்வாகி பூச்சி முருகன் திருமணத்தை திமுக உயர்மட்டத் தலைவர்கள் உடை சூழ நடத்தை வைத்தார். அப்படி இருக்க குடியரசு ...

உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றி மட்டுமல்ல, பிரமிக்கதக்க வெற்றியும் பெற்றுள்ளது! இந்த வெற்றி எப்படி சாத்தியமானது..? இந்த மிருகபல வெற்றி நியாயமானதா? இந்த வெற்றியில் அனேக அனுகூலங்கள் இருந்தாலும், சில ஆபத்துகளும் புதைந்துள்ளன! மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளை தேர்வு செய்யும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன! மொத்தமாக உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன! இதில் முக்கிய ...