சமீப காலமாக தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் நம்பமுடியாத விசித்திரமாக உள்ளன! இன்றைய தினம் ஒ.பி.எஸ் எடுத்து வைத்த ஒவ்வொரு நகர்விலும் திமுக அரசின் ஒத்துழைப்பு கிடைத்ததை எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை! அதிமுகவின் சென்ற பொதுக் குழுவின் போது இரவோடு இரவாக நீதிமன்றக் கதவுகளை திறக்க வைத்து விடிய,விடிய விசாரிக்கப்பட்டு, அதிகாலை நாலரை மணிக்கு ஒ.பி.எஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததில் திமுக தலைமை காட்டிய அக்கறை உண்மையிலேயே பத்திரிகையாளர்களுக்கு பெரும் திகைப்பை ஏற்படுத்தியது. ஒ.பி.எஸ்சுக்கு பின்னணியில் பாஜக இருப்பதை புரிந்து கொள்ள முடியும்! ...