அல்வாவிற்கு பேர் போனது திருநெல்வேலி! ஆனால், அந்த திருநெல்வேலியையே அல்வா துண்டுகள் போல வெட்டி விழுங்கிவருகிறார்கள் கல்குவாரி முதலாளிகள்! ஆளும் கட்சியின் எம்.பி ஒருவரே இதற்கு அனுசரணையாக இருப்பது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது..! மேற்கு தொடர்ச்சி மலை இந்தியாவிற்கு கிடைத்த கொடை எனலாம். பசுமை மாறாக் காடுகளும்  அரிய வகை உயிரினங்களும் இங்கு ஏராளமாக உள்ளன. நர்மதை, தபதி நதிகளை தவிர மற்ற தென்னிந்திய நதிகள் அனைத்துக்கும் இதுதான் பிறப்பிடம். தமிழ்நாட்டின் ஜீவாதார நதிகளான காவிரி, வைகை ,தாமிரபரணி போன்றவற்றிற்கு தாய்மடி இம்மலைதான். தொன்மையும் ...

இந்திய ராணுவத்திற்கானவற்றை உற்பத்தி செய்யும் ஆவடி டேங்க் தொழிற்சாலை உள்ளிட்ட 41 ஆலைகளை தனியாருக்கு தாரை வார்க்கிறது பாஜக அரசு. இதை தொழிலாளர்கள் எதிர்த்து போராடினால் சிறை தண்டனை, அவர்களை ஆதரிப்போருக்கும் சிறை தண்டனையாம்! 75 ஆண்டு கால சுதந்திர இந்தியா கட்டிக் காப்பாற்றிய தொழிற்சங்க ஜனநாயக உரிமைகளை ஒழித்துக் கட்ட ஏழே நிமிடத்தில் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது பாஜக அரசு! இதன் படுபாதகங்களை பார்ப்போமா..? ஜனநாயக உரிமையை பறிக்கும் வகையில்  ஒன்றிய அரசு ‘அத்தியாவசியப் பாதுகாப்பு சேவைச் சட்டத்தை’ (Essential Defence ...

கொரோனா கால இடைவெளிக்கு பிறகு கல்லூரிகள் திறக்கும் நிலையில், நெஞ்சை உலுக்கும் சில உண்மைகளை கவனப்படுத்த வேண்டியுள்ளது! கல்வி நிறுவன முதலாளிகளில் சிலர் எவ்வளவு களவாணிகளாக உள்ளனர்..! தனியார் கல்லூரி ஆசிரியர்கள் பலர் வாழ்க்கை எவ்வளவு அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பன அதிர்ச்சியளிக்கிறது..! திருநெல்வேலியை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியின் உதவி பேராசிரியர் சம்பளம் மாதம் ரூ 18,000. த்தில் இருந்து  படிப்படியாக குறைக்கப்பட்டு  இந்த கொரோனா தொற்று காலத்தில் ரூபாய் 3000-ஐ தொட்ட நிகழ்வு   பெருஞ் செய்தியாக சமூக ஊடகங்களில் வெளியானது. இதுபோன்ற வருவாய் ...

“போக்குவரத்து  துறை பத்தாண்டுகளாக படு நஷ்டத்தோடு இயங்குகிறது.. அதிக  பணியாளர்கள், ஓய்வூதியம், டீசல், வட்டிச் செலவினங்கள் போன்ற காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து இழப்புகள் ஏற்பட்டுள்ளன.” என்று நிதி அமைச்சர் ப.தியாகராஜன் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இது எந்த அளவுக்கு உண்மை? ஏன் இந்த நஷ்டம்? எப்படி ஏற்படுகின்றது நஷ்டம்..? என்பதை  இங்கு விளக்குகிறார் சிஐடியு  தொழிற்சங்கத்தைச் சார்ந்த கே.ஆறுமுக நயினார் . மாணவர்களுக்கு இலவசப் பயணம், பெண்களுக்கு இலவசப் பயணம், உழவர் சந்தைகளுக்கு,  பேருந்துகளில் விவசாயிகள் காய்கறிகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம்…, மாற்றுத் ...