மென்மையான காதல் கதையை  ராணுவப் பின்னணியில் அழகாகவும், இதமாகவும் தந்துள்ளார் இயக்குனர் ஹனு ராகவபுடி. துல்கர், மிருணால் நடிப்பில் இளமையும், இனிமையும் பொங்கி வழிகிறது!  இந்தியா-  பாகிஸ்தான், காஷ்மீர் சிக்கலை பின்னணியாகக் கொண்ட, மிக அற்புதமான காதல் காவியம்! சண்டைக்காட்சிகள், பிரம்மாண்டம், டூயட், அடிதடி என்பதான தெலுங்கு இண்டஸ்டிரியில் இருந்து மாறுப்பட்ட  இனிமையான, இதமான படமாக வந்துள்ள சீதாராமம், தமிழ் உள்ளிட்ட அனைத்து தென் இந்திய மொழிகளிலும் வெளியாகி உள்ளது. எளிய காதல் கதையை பரபரப்பான விறுவிறுப்பான ஆக்‌ஷன் படமாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.  ...