பணிவின் சிகரமாக வெளிப்படுவார் பசுவைப் போல சாந்த சொரூபியாக காட்சி தருவார்! ஆனால், படு காரியவாதி! அவர் தான் ஒபிஎஸ்! பதவி ஒன்றே அவரது இலக்கு! பாஜக விசுவாசம் மட்டுமே அவரது குறிக்கோள்! இருபதாண்டுகளாக அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பெரிய பதவிகளை அனுபவித்த ஒபிஎஸ், இன்று சொந்த கட்சியிலும்,தொகுதியிலும் அந்நியப்பட்டு நிற்கிறார். இன்றைக்கு தமிழகம் சந்திக்கும் இழிவுகளுக்கும், ஆபத்துகளுக்கும் பிள்ளையார் சுழி போட்ட பெருமகனும் இவர் தான்! தேனீர் கடையோடு, பைனான்ஸ் பிசினஸையும் பார்த்துக் கொண்டு, எம்ஜிஆர் இளைஞர் அணியில் செயல்பட்டு வந்த ...