இளம் மருத்துவ மாணவர்கள் உறுதி குலையாமல் போராடினர். அதிகார பலம், மக்கள் செல்வாக்கு, தொண்டர்கள் பலம், நீதிமன்ற ஆணை.. அனைத்தும் மாணவர்களிடம் பலனின்றி போனது. இது வரை எல்லா போராட்டங்களையும் ஒடுக்கிய மம்தாவின் ‘பாட்சா’ மாணவர்களிடம் பலிக்கவில்லை.. மம்தா மண்டியிட்ட சம்பவம் ஒரு அலசல்; பல்வேறு மக்கள் போராட்டங்களுக்கு முன்பு இரும்பு பெண்மணியாக வலம் வந்தவர் மம்தா பானர்ஜி. அந்த மம்தா மாணவர்கள் முன்பு பல முறை மண்டியிட்டார். அதே சமயம் அவர் மண்டியிட்டாலும் கூட, மாணவர்கள் மசியத் தயாராக இல்லை என்பதை வலுவாகவே ...