கடும் நிதி நெருக்கடிகள்! பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் தர முடியாத நிலைமையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் மூச்சுத் திணறுகிறது! அதன் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி உள்ளது! காரணம் என்ன? யார் பொறுப்பு? தென்தமிழகத்தின் கல்வித்தேடலுக்கு ஒரு கலங்கரை விளக்காக ஒளி வீசிப் புகழ் பெற்ற  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இன்று தடுமாறிக்கொண்டுள்ளது வேதனை. வரலாறு பல படைத்த அன்றைய மதராஸ் பல்கலைக்கழகத்திற்கு (சென்னை பல்கலைக்கழகம் Madras University) நிகராக மதுரையில் தென்தமிழகத்தின் கல்வித்தேவையை முன்னிட்டு 1965ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மதுரை பல்கலை கழகம் பின்னாட்களில் ...