இந்தியாவில் எந்தப் படிப்புக்கும் இல்லாத வகையில் மருத்துவ கல்விக்கு பெரிய மவுசையும், மாயத் தோற்றத்தையும் கட்டமைத்து எம்.பி.பி.எஸ் படிப்பதை சமூக அந்தஸ்தாக்கிவிட்டார்கள்! ஆனால், அரசு மருத்துவர்களுக்கு நியாயமான சம்பளம் கூட இல்லை! இன்னொருபுறம் புற்றீசல் போல தரமற்ற தனியார் மருத்துவ கல்லூரிகள் பெருகுது..! ”இப்ப தமிழ் நாட்டில இன்ஜினியரிங் கல்லூரிகள் பெருகியதால பல கல்லூரிகளில் படிக்க ஆள்வராமல் காத்து வாங்கிட்டு கெடக்குது! இன்ஜினியரிங் படிசவங்களில் 80 சதமானோருக்கு சரியான வேலை கிடைக்கிறதில்லை. வருங்காலத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அந்த நிலைமை வரக் கூடும். டாக்டர்களுக்கு நோயாளிகள் ...