ஒரு காந்தியவாதியாய் இருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல, ஆனால் உண்மையான மாற்றத்திற்கு அவரை விட்டால் வேறு வழியில்லை. உண்மையில் அவர் ஒரு ஆன்மீக வாதி, இறை நாட்டம் அதிகம் கொண்டவர். ஆனால் இறை காட்சி வேண்டி எந்த கோவில் குளங்களுக்கும், தீர்த்த யாத்திரைக்கும் சென்றவர் அல்ல . இறைவனைத் தேடி இமயம் சென்றவரல்ல, தான் வாழும் மக்களிடையே அவர் இறைவனைக் கண்டார்! அநீதிகளற்ற அனைவருக்குமான பொதுநலனில் இறைவன் இயங்கிக் கொண்டிருப்பதாக நம்பினார் காந்தி! அவர் நம்மிடம் கேட்டதெல்லாம் எத்தகைய மாற்றத்தை நாம் வெளியில் காண ...
இன்றைய சூழலில் காந்தி என்ன செய்திருப்பார் என பிரசாந்த் பூஷன் பேசுகிறார். மார்டின் லூதர் கிங் தனது நோபல் விருது ஏற்புரையில் அமெரிக்காவின் நீக்ரோ இன மக்கள் இந்திய மக்களின் முன்மாதிரியைப்பின்பற்றி, வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் நடத்தி வென்றனர். அகிம்சை என்பது வலிமையற்ற மலட்டு ஆயுதமல்ல, மாறாக ஒரு வலிமைமிக்க அற ஆயுதம்! இந்த வலிமை மகத்தான சமூக மாற்றத்தை உண்டாக்க வல்லது என்பதை நிரூபித்துள்ளது” என்றார். இந்த வலிமை மிக்க சமாதான வழியிலான எதிர்ப்பு பல ஆண்டுகள் முன் வன்முறை மோதல்களில் மூழ்கிக் ...
இன்றைக்கு காலத்தின் தேவையாகிறார் காந்தி காந்தி அமைதி அறக்கட்டளை டெல்லியில் ஏற்பாடு செய்த நிகழ்வில் வழக்கறிஞரும்,சமூகச் செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷன் காந்தி எப்படி இன்றைய காலத்தின் தேவையாகிறார் என்பதை ஆழமாகவும்,அழகாகவும் எடுத்துரைத்தார். குறிப்பாக அரசாங்கமே மக்களைச் சுரண்டும் போது, மக்கள் பாரபட்சமாக நடத்தப்படும் போது,சட்டங்களை அரசே வளைக்க முற்படும் தருணங்களில் எப்படி மக்கள் எதிர்வினையாற்ற வேண்டும் என காந்தியின் கோணத்தில் பேசினார்! அதன் தமிழாக்கத்தை காந்தியவாதியும்,மருத்துவருமான ஜீவா தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஆற்றிய செயல்பாடுகளும்,உரைகளும் சமூக தளத்திலும், ...