திருமண நிகழ்விற்கு காந்தியின் வருகையை உறுதிபடுத்த வேண்டுமானால் அதில் மணமகனோ,மகளோ ஹரிஜனாக இருந்தால் போதுமானது. அப்படியான திருமணங்களுக்கு முன்னுரிமை தந்து காந்தி ஆஜராகிவிடுவார் என்பது காந்தியின் இறுதிக்காலத்தில்  எழுதப்படாத விதியாக இருந்துள்ளது. மணமகனோ, மணமகளோ ஒருவராவது ஹரிஜனாக இல்லாத திருமணங்களுக்குச் செல்வதை காந்தி நிறுத்திக் கொள்கிறார்.  போன்ற பல அபூர்வ தகவல்களை இந்த நூல் சொல்கிறது. காந்தியின் 150 வது ஆண்டை முன்னிட்டு “காந்தியைக் கண்டுணர்தல்” என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. இதில் காந்தி குறித்த 16 கட்டுரைகள் நூலில் உள்ளன.காந்தியைப்  புதிய வெளிச்சத்தில் காட்டுகிறார்! ...