மீரான் மைதீன் எழுதியிருக்கும் புதிய நாவல் ‘ஒச்சை’. கன்னியாகுமரி மாவட்டத்தின், ஏதோ ஒரு கிராமத்தில் நடக்கும் கதையை மிக உயிர்ப்புடன் எழுதியுள்ளார்! ஒச்சை என்று சொல்லுக்கு இரைச்சல் என்று பொருள். வளைகுடாவில் பணிபுரியும் மாந்தர்களை ‘அஜ்னபி’ நாவலில் காட்சிப்படுத்தியவர் மீரான் மைதீன். அவருடைய உரையாடலும், பாத்திரங்களின் சித்தரிப்பும், எள்ளலும் இந்த புதிய நாவலிலும் தொடர்கிறது. யாராலும் புறக்கணிக்க முடியாத இடத்தை தமிழ் இலக்கிய உலகில் பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம். ‘ஒச்சை’ கதையின் நாயகன் கோயா. ஆனால் கோயாவின் நிஜப்பெயர் நூர்தீனோ அல்லது கமர்தீனோ. ‘ஏகதேசம் ...
கடும் உழைப்பால் ஆயிரக்கணக்கில் அந்நியச் செலவாணியை ஈட்டித் தரும் இந்த எளிய மனிதர்கள் அரபு நாடுகளில் படும் அல்லல்கள் அசாதாரணமானது! வயிற்றுப்பாட்டுக்காக வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் பலதப்பட்ட சுவாரஷ்யமான அனுபவங்கள், அரபு நாட்டவர்களின் விசித்திரமான குணாம்சங்கள், பல நாடுகளில் இருந்து சென்று சம்பாதிப்பவர்கள் சந்திக்க நேரும் சவால்கள்..எனப் பல விஷயங்கள் இந்த நாவலில் மிக தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ‘கொட்டிக்கிடக்குது சௌதியிலே’ என்ற ஆடியோ கேசட் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. துபாய், சௌதி போன்ற நாடுகளில் பணிபுரிபவர்களின் வாழ்க்கையை அதில் படம் போல காட்டியிருப்பார்கள். ...