அழகும், நறுமணமும் கொண்ட இந்த மகிழம்பூ சூடுவதற்கானது மட்டுமல்ல; பல அரிய பல மருத்துவ குணங்களும் நிறைந்தது! மனச் சோர்வை நீக்கி மகிழ்ச்சி தரும். தலை வலி போக்கும். அமைதியான தூக்கம் தரும்… போன்ற பல அற்புதங்கள் நிகழ்த்தும் மகிழத்தை எப்படியெப்படி எல்லாம் பயன்படுத்துவது எனப் பார்ப்போம்; பல்களை பாதுகாக்கும், மன மகிழ்ச்சிக்கு என்று ஒரு மரம் இருக்கிறது , அதன் பேரை சொன்னாலும் , அதன் மணத்தை முகர்ந்தாலும் இன்னமும் அது மனதை மகிழ்விக்கிறது . பூ என்றாலே மணம் தான், மணம் ...