கட்சி ஆரம்பித்து முதல் பொதுக் குழுவாம்…! அதுக்கே இந்த ஆர்ப்பாட்டம் ஆடம்பரம், ஆர்ப்பரிப்பு…படாடோபம்! மெத்த படித்தவர்,மேட்டுக்குடி மனிதர் உலக ஞானம் கொண்டவர் என்ற போதிலும் இன்று கமல்ஹாசனும் மற்ற கழிசடைக் கட்சிகளின் தலைவர்களைப் போலவே பந்தா காட்டி பொதுக் குழுவை நடத்தியுள்ளார்! சசிகலா ஜெயிலில் இருந்து வந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை நினைவுபடுத்துவது போல வழி நெடுக பேனர்கள், கட் அவுட்கள்..செண்டை மேளம்,பறை இசை,ஆட்டம்பாட்டம், வாழ்க கோஷம், பூங்கொத்துகள்.. மலர் தூவல்கள்…என எதற்கு இத்தனை ஆர்ப்பரிப்பு! தன் கட்சியின் பொதுக்குழுவிற்கு அதன் தலைவர் வருவதே ...