800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவதா? தொடர்வதா? என்பதை ஒரு விவாதமாக்கிவிட்டார்கள்..! 800 படத்திலிருந்து விஜய் சேதுபதியை விலகச் சொல்வதும்,முத்தையா முரளிதரனை எதிரியாகச் சித்தரிப்பதும், இலங்கையில் வாழும் நமது இந்திய வம்சா வழித் தமிழர்களான மலையகத் தமிழர்களுக்கு நாம் செய்யும் அநீதியாகும். மலையகத் தமிழர்களுக்கு கேட்க யாரும் நாதியில்லை என்ற மனோபாவம் தானே! ஈழத் தமிழர்களுக்காக உருகுபவர்கள் ஒடுக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் மத்தியில் இருந்து எழுந்து, இன்று ஒரு உலக கிரிக்கெட் சாதனையாளனாக பார்க்கப்படும் முத்தையா முரளிதரனை எதிர்ப்பது என்ன நியாயம்? இனவெறுப்பு அரசியல் இலங்கையிலேயே விடை பெற்றுக் ...