கெளரி லங்கேஷ் படு கொலையை மையமாக்கி ஒரு அரசியல் படத்தை புதிய கோணத்தில், புதிய தளத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் இந்து! இவர் மலையாள சினிமாவின் இன்னொரு நம்பிக்கை நட்சத்திரம். ஒரு மக்களுக்கான படைப்பாளி இறந்த பிறகு தன் படைப்பால் வாழுவதை உயிர்ப்போடு சொல்கிறது படம்! மலையாளத்தில் வெளியாகி இருக்கும் 19(1)(A) திரைப்படம் வலுவான திரைமொழியோடும் தீவிரமான அரசியல் படமாகவும் வந்திருக்கிறது. விஜய்சேதுபதி, நித்யாமேனன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குனர் வி. எஸ். இந்து. எளிய நீரோடையைப் போன்ற கதை.  முக்கிய ...

கணவன், மனைவி இருவரும் வழக்கறிஞர்கள்! ஒரு பாலியல் வழக்கில் பெண்ணுக்கு கணவனும், ஆணுக்கு மனைவியும் ஆஜராகி வாதாடுகிறார்கள்! யார் வெற்றி பெறுகிறார்? இதனால், தொழில் முறையில் எதிர்ரெதிர் நிலையில் நிற்கும் இருவருக்குமான குடும்ப உறவில் ஏற்படும் விரிசல்கள் என்னானது? நீதிமன்றத்தில் நடைபெறும் கதை என்று புரிதலுக்காகச் சொல்லலாம். இந்தப் படத்தில் எபினும், மாதவியும் திருமணமாகாத இளம் வழக்கறிஞர்கள். எபின், சுயேச்சையாக தொழில் நடத்த ஒரு அலுவலகம் போட நினைக்கையில் அவனுக்கு அரசாங்க வழக்கறிஞர் பதவி கிடைக்கிறது. டொவினோ தாமஸ், எபினாக நடித்துள்ளார். கணவன் குற்றவாளியாக ...

ஆதிவாசிகள் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டு வருவதை தோலுரித்துக் காட்டும் சிறந்த அரசியல் திரைப்படம்! தங்கள் நிலவுரிமையை மீட்டெடுக்க நான்கு ஆதிவாசி இளைஞர்கள் நிகழ்த்திய அதிரடி சாகஸம் தான் இந்தப் படம்! சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிஜ சம்பவம் தான் தற்போது சினிமாவாகியுள்ளது! ‘ பட’  மலையாளப்படம் தற்போது பிரைம் தளத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது. பட என்ற சொல்லுக்கு படை என்பது பொருள். ‘அய்யங்காளி படை’ என்ற அமைப்பைச் சார்ந்த நான்கு பேர் மாவட்ட ஆட்சித்தலைவரை,  அவரது அலுவலகத்திலேயே  பணயக் கைதியாக்கி வைத்திருக்கிறார்கள். ...

மியாவ்’ (Meow) – வளைகுடா நாட்டில் நடைபெறும்  முஸ்லிம் குடும்பக்கதை. வளைகுடா நாடுகளில் வாழும் ஒரு மலையாள இஸ்லாமிய குடும்பத்தின் ஊடல்,மோதல்,கூடல் ஆகியவை மிக இயல்பாக காட்சிபடுத்தப்பட்டு உள்ளது. இஸ்லாமிய அடிப்படை வாதத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. தஸ்தகிர் ஒரு சூப்பர் மார்கெட் வைத்திருக்கிறான். மூன்று குழந்தைகள். மனைவி கோபித்து சென்ற நிலையில், தனது கார் ஓட்டுநரும், உதவியாளருனமான சந்திரேட்டனை  வைத்துக் கொண்டு, குடும்பத்தை நடத்துகிறான். இயக்குனரான லால் ஜோஸ் மிக அழகாக கதையை எடுத்துச் செல்கிறார். கதையில் வில்லன் இல்லை; திருப்பங்கள் இல்லை; மோதல்கள் ...

Home – ஆண்ட்ராய்டு போனைச் சுற்றி ஒரு குடும்பக் கதை! குடும்பத்தில் ஒருவருக்கொருவர் புரிதலையும், அன்னியோனியத்தையும் எப்படி கையாள்கிறோம் என்ற சுய பரிசீலனைக்கு நம்மை இந்தப் படம் கொண்டு செல்கிறது! தங்கள் சுய நலத்தை மட்டுமே மையப்படுத்தி சிந்திக்கும் இளம் தலைமுறையும், சகிப்புத் தன்மையுடன் அன்பை வெளிப்படுத்தும் முந்தைய தலைமுறையும் மிக இயல்பாக வெளிப்படுகின்றனர் இந்த குடும்பக் கதையில்! Home என்ற மலையாளப் படம் சமீபத்தில் வெளிவந்துள்ள படம். அமேசான் தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு போன் ஒரு  குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதை. ...

குழந்தை பெற்றுக்கொள்வது என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமையா..? ‘அவள் உடல் அவள் உரிமை’. என்பதை சமூகம் ஏற்கிறதா..? குழந்தை பெற்றுக் கொள்வதோ, மறுப்பதோ  அல்லது தள்ளிப் போடுவதோ அவள் மட்டுமே எடுக்க முடிந்த முடிவா..? இதைப் பற்றி மிக இயல்பாக இந்தப் படம் விவாதிக்கிறது. இப்படத்தின் இயக்குநர் ஜாது அந்தாணி ஜோசப் சிக்கலான இந்தக் கதையினை மிக நேர்த்தியுடன் சுவாரசியமான படைப்பாக்கி இருக்கிறார் ‘மலையாளப் படத்தை நம்பிப் பார்க்கலாம். படத்தில ஒண்ணுமே இல்லைனாலும் இரண்டு மணி நேரம் ஓடிவிடும் ‘ – என்று ...