மலேசிய இந்தியர்களில் 85% தமிழர்களாக உள்ளனர். ஆனால், இந்திய அரசு இங்கு ஏனோ அதிகாரிகளாக தமிழர்களை நியமிப்பதில்லை.தூதரகத்தை நாடும் தமிழர்களை வட இந்திய அதிகாரிகள் அலைக்கழித்தல், அவமானப்படுத்தல் தொடர்கிறது! மேலும், இவர்கள் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சித்தாந்தத்தை மலேசியா தமிழர்களிடம் திணிக்க துடிக்கிறார்கள்! மலேசிய இந்தியர்களில் ஏறக்குறைய 85 விழுக்காட்டினர் தமிழராக இருந்தும் இந்தி மொழிக்காரர்களையும் மற்றவர்களையுமே இங்கு தூதராக அனுப்புவது இந்திய ஒன்றிய அரசின் வாடிக்கையாக இருக்கிறது. அத்துடன், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, உள்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் தூதரக சேவையை நாடும்பொழுதெல்லாம் ...